திங்கள், டிசம்பர் 20, 2010

அறுகம்புல்


அறுகம்புல் விநாயகருக்கு சூட்டப்படும் என்பதால் இது தெய்வீக மூலிகை இனத்தைச் சார்ந்ததாகிறது. ஆற்றங்கரை ஓரங்களிலும், சதுப்பு நிலங்களிலும் எளிதில் வளரக்கூடியது. அறுகம்புல் மருத்துவ குணங்கள் பலவும் கொண்டது. விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது.
அறுகம்புல்லின் ஊறல் நீரும், பாலும் சேர்த்து உட்கொள்ள கண் நோய், தலை நோய், கண் புகைதல், குருதியழல் இவை ஒழியும்.
அறுகம்புல்லை இடித்துப் பிழிந்த சாற்றை கண்ணுக்குப் பிழிய கண் நோயும், கண் புகைச்சலும், மூக்கிலிட, மூக்கிலிருந்து பாயும் குருதியும், காயம் பட்ட இடத்தில் பூச அதிலிருந்து வடியும் குருதியும் நிற்கும். புண்களின் மீது தடவ புண் ஆறி வரும்.
அறுகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்துத் தடவிவர சொறி, சிரங்கு, படர்தாமரை போகும்.
அறுகம்புல்லுடன், கடுக்காய்த் தோல், இந்துப்பு சிறிது, கிரந்தி தகரம், கஞ்சாங்கோரை இவை ஓரெடை எடுத்து மோர் விட்டரைத்துப் பூசி வர சொறி, சிரங்கு, படர்தாமரை ஒழியும், நுண் புழுக்களும் சாகும்


தேங்காயை கருகிப் போகும் அளவு சுட்டு அந்த தேங்காயின் அளவில் பாதி மிளகு சேர்த்து நன்றாக அரைத்து நோய் ஏற்பட்ட இடங்களில் பூசி பகல் முழுதும் விட்டு பின்னர் மாலையில் வெந்நீரால் கழுவி விட வேண்டும். இவ்வாறு மூன்றுநாள் தொடர்ந்து செய்தால் சொறி , சிரங்கு, கரப்பான் போன்ற நோய்களும், அதே போல ஆறாமல் இருக்கும் மற்ற புண்கள் கூட ஆறிவிடும் என்கிறார் போகர்.

கருத்துகள் இல்லை: