புதன், டிசம்பர் 08, 2010

தேங்காய் பால் தலைமுடிக்கு வரப்ரசாதம்:


தயாரித்தல் :
முடிக்கு ஏற்றவாறு தேங்காயை எடுத்து (ஒரு மூடி) சிறிது நீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும்.
எப்படி பயன்படுத்த வேண்டும் :
1.முக்கியமாக தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டும்.( வெள்ளிக்கிழமை தலைக்கு, குளித்தால் அடுத்த நாள் சனிக்கிழமை காலை அப்ளை செய்யவும்.)
2.மிகவும் நீர் போல இருப்பதால் உருண்டு கழுத்தில் எல்லாம் வர வாய்ப்புள்ளது. அப்ளை செய்து விட்டு ஸ்விம்மிங் கேப் கூட போடலாம்...
3.இரண்டு மணி நேரம் ஊறிய பின் ஷாம்பு போடாமல் தலையை நன்கு அலச வேண்டும்.
4.தேங்காய் பாலில் உள்ள இயற்கையான எண்ணெய் தலையில் தங்கி இருக்கும்..
5.அடுத்த நாளோ, அல்லது தேவைப்படும் போது ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கலாம்.
பலன் :
1.தலைமுடி மிருதுவாகும்
2.புதிய முடிகள் உருவாகும் (மூன்றே வாரத்தில் உணரலாம்)
3.முடி உதிர்தல் கட்டுபடும்
4.முடி நீளமாக வளர உதவும்.
வாரம் இருமுறை தலைக்கு குளிப்பதை எவ்வாறு தவறாமல் செய்கிறோமோ அதை போல வாரம் ஒரு முறையாவது இதை கடைபிடித்து பார்த்து சொல்லுங்கள். எல்லோரும் வித்தியாசத்தை உணருவீர்கள். என்னை கொண்டாடுவீர்கள் ;-

கருத்துகள் இல்லை: