வெள்ளி, டிசம்பர் 03, 2010

பூண்டு



உலக அளவில் அனைத்து நாடுகளிலும் பூண்டை பயன்படுத்துவது வழக்கத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளாக சமையல் அறைகளில் பூண்டு முக்கிய அங்கம் வகிக்கிறது.

ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து மிகவும் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. 14-ஆம் நூற்றாண்டில் இருந்தே எகிப்து நாட்டில் பல்வேறு நோய்களுக்கு பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டின் பயன்பாடு குறித்து குறிப்பிடுகையில், `ஜீரணத்திற்கு பூண்டு மிகவும் உகந்தது. அது உடலுக்கு எவ்வித தீங்கும் விளைவிப்பதில்லை. உடலை புத்துணர்வுடன் வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் பூண்டு உதவுகிறது,' என்கிறது.

உடலில் உருவாகும் சிறு கட்டிகள், முகப்பருக்கள், படை உள்ளிட்ட சரும நோய்களின் மீது பூண்டை அரைத்து தடவினால் நல்ல குணம் கிடைக்கும். இது தவிர நீண்ட நாள் சரும நோயும் நீங்கி விடுவதாக ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிக குளிர் பிரதேசங்களில், குறிப்பாக ரஷியா போன்ற நாடுகளில் பூண்டின் பயன்பாடு மிகவும் அதிகமாக உள்ளது. குளிர் நாடுகளில் மூட்டுவலி மற்றும் சீரான ரத்த ஓட்டத்திற்கு, உணவு பொருள்களில் பூண்டை சேர்த்துகொள்வது வழக்கமாக இருந்து வருகிறது.

அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கு பூண்டு அருமருந்தாக உள்ளது. பூண்டை உணவு வகைகளுடன் உண்ணும்போது அது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவு படுத்துவதுடன், அடைப்புகளையும் நீக்கி விடுகிறது. இதனால், சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது. உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்யப்படுகிறது.

தினந்தோறும் ஒன்று முதல் மூன்று பூண்டு பற்களை உண்டு வந்தால், இதயநோய் வருவதற்கே வாய்ப்பில்லை என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை பூண்டு அகற்றி விடுவதால், எந்தவித நோயும் அண்டுவதில்லை.
பொதுவாக, ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்போது மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, இதய நோயாளிகளுக்கு ரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதற்காக ஆங்கில மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. பூண்டை பயன்படுத்துவதன் மூலம் இயற்கையாகவே ரத்தத்தின் அடர்நிலை குறைந்து, சீரான ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. எனவே, பூண்டு உண்பதால் எவ்வித பக்க விளைவும் இல்லாமல் நோய்கள் குணமாகின்றன.

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட இந்த பூண்டை உண்பதால் ஒருவித வாடை ஏற்படுகிறது. இதனாலேயே பலர் பூண்டை உணவுடன் சேர்த்துக் கொள்வதை தவிர்க்கின்றனர். இதை தவிர்க்க பூண்டு பற்களை, வெங்காய துண்டுகள், இஞ்சியுடன் இளம் சூட்டில் வறுத்து உண்ணலாம். தவிர, பூண்டு உணவு அல்லது பூண்டை உட்கொண்ட பிறகு கொத்தமல்லி, லவங்கம் அல்லது கிராம்பு போன்றவற்றை வாயில் ஒதுக்கி கொண்டால் பூண்டினால் உண்டாகும் ஒரு விதமான வாடையை தவிர்க்கலாம்.
.


பூண்டின் மருத்துவ குணங்கள்

1) பூண்டையும் உப்பையும் சேர்த்து கசக்கி சாறெடுத்து தடவ அளுங்கு, மேல்தோல்சரிவு குணப்படும்.
2) காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம்.
3) பூண்டு சாறினை வலிப்புவருகிற குழந்தைகளுக்கும், இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல மெல்ல குணம் பெறலாம்.
4) இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகளை சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுக்க குணம் எளிதில் கிடைக்கும்.
5) டான்ஸில் என்கிறஉள்நாக்கு வளர்ந்திருப்பவர்கள்-அந்த வளர்ந்த உள்நாக்கு சதை வளர்ச்சியின் மீது தடவ பூண்டுசாறினை தடவி குணம் கிடைக்கும்.
6) பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட கொழுப்பு (கொலஸ்ட்ரால் குறையும்) ரத்தக் கொதிப்பு, ஹைபவர் டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
7) பூண்டில் பலவித மானசத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம் சத்துத்தான். எனவே பூண்டை அதிகமாகசமையலில் பயன் படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்பிற்கு வருகின்ற கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
cool பூண்டை வறுத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது.9 பூச்சிக்கடி, உள்ள இடத்தில் பூண்டை வைத்து தேய்த்து விடலாம.
10) பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில்போட தேமல் காணாமல் போய் விடும்.
11) வெள்ளைப்பூண்டை தினமும்சாப்பிட்டு வந்தால் கொழுப்புக் குறையும்.
12) பூண்டு சாப்பாட்டின் வாய் துர் நாற்றம் இருப்பது உண்மை. எனவே பூண்டை தவிர்க்காதீர்கள். பூண்டை சாப்பிட்டவுடன்கொஞ்சம் அரிசி சாப்பிடுங்கள். பூண்டு நாற்றம் போய் விடும்.
13) சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் விட்டுத் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள். சளி போயே போச்சு.
14) வெள்ளைப் பூண்டைபாலில் வேகவைத்து காலை, மாலை அருந்தலாம்.வெங்காயத்தை நெய்யில் வதக்கியும் காலை மாலை சாப்பிட்டு வரலாம். உடல் நலம் பெறும்.
15) பூண்டு கொஞ்சம் எடுத்துஅதே அளவிற்கு வெற்றிலையும் வைத்துச் சேர்த்து அரைத்து எச்சில் தழும்பின் மீது பூசிவைத்திருந்து நன்கு ஊறவிட்டுக் கழுவிவிட்டு, மறுபடியும் போட வேண்டும். மூன்றே நாளில் எச்சில் தழும்பு மறைந்தே விடும்.
16) பூண்டை உணவில் அதிகம்சேர்ப்பவர்களுக்கு, மலேரியா நோய் வராத
17) வெள்ளைப்பூண்டை உணவில்சேர்த்தால் கொழுப்பு குறையும்.
1cool கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டுக்குள் இருக்க, தினமும் காலை, 4 வெள்ளைப்பூண்டுத் துண்டைச் சாப்பிடலாம.
19) பூண்டு பல மருத்துவநன்மை கொண்டு இருப்பினும்கூட மூலம், பௌத்திரம், பாதிப்பு இருப்பவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். ஏன் எனில் பூண்டு ஒரு வெப்ப உண்டாக்கி. எனவே மூல பௌத்திர பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும்.

கருத்துகள் இல்லை: