திங்கள், டிசம்பர் 13, 2010

எளிய இயற்கை மருத்துவம்

பூண்டு

குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான பானங்களைவிட, அதிகம் ஊட்டச்சத்து தரும் டானிக் பூண்டு. அவர்களுடைய தினசரி உணவில் பூண்டு இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். பூண்டு அவர்களது இதயத்தை சீராக செயல்பட வைக்கும். ஞாபக சக்தி கூடும். உடல் பொலிவு பெறும்; பலமும் கூடும். தொண்டை இதமாகி, குரல் இனிமையாகும். கண் பார்வை கூர்மையாகும். நோய்த் தொற்றுக்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும்.

தசைப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றுக்கு பூண்டுப் பால் துரித நிவாரணம் தருகிறது. அது என்ன பூண்டுப் பால்? பதினைந்து கிராம் பூண்டை தோல் உரித்து, சாறு வீணாகிவிடாமல் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு சுண்டும் வரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் பூண்டுப் பால் குடித்து வந்தால் தசை, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் பறந்தோடிவிடும்

வெங்காயம்
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவதி தருவது, தலையில் பேன் தொல்லை. பேன்களை ஒழிக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயத்தை தோல் உரித்து, பச்சையாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சாறை தலையில் எண்ணெய் தடவுவது மாதிரி உச்சியிலிருந்து ஊற்றித் தேயுங்கள். அரை மணி நேரம் ஊறவிட்டு, அப்புறம் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் தலையை அலசினால் பேன்கள் ஒழியும்.

உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை அகற்றும் மாயாஜாலத்தை செய்ய வல்லது வெங்காயச் சாறு. தினமும் சில துளிகள் வெங்காயச் சாறு குடித்து வருபவர்களுக்கு இப்படி கெட்ட கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி, ரத்தமும் சுத்தமாகும். இதயத்தின் செயல்பாட்டையும் இது சுறுசுறுப்பாக்குகிறது. முறையாக தூக்கம் வராமல் அவதிப் படுகிறவர்கள், வெங்காயச் சாறு குடித்து வந்தால், தூக்கம் இயல்பாகும்.

மிளகு
செரிமானக் கோளாறும் வயிற்றுப்பொருமலும் கூட்டணி சேர்ந்து வதைக்கும்போது, உடனே நாடவேண்டியது மிளகை. அரை டீஸ்பூன் மிளகுத்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சவும். தண்ணீர் கால் பங்கு ஆகும் அளவுக்கு நன்கு காய்ச்சி, சுண்டவைத்து, அதைக் குடித்தால் உணவு உடனே செரிக்கும். வயிற்றுப் பொருமல் சரியாகும். இந்த மிளகுக் கஷாயம் வயிற்றுப் புண், தொண்டைப் புண் ஆகியவற்றையும் குணப்படுத்தும் அருமருந்து





கருத்துகள் இல்லை: