ஞாயிறு, டிசம்பர் 12, 2010

எலுமிச்சம்பழம்

lemon



நமது அன்றாட வாழ்வில் எலுமிச்சம் பழத்தை எப்படி பயன்படுத்தலாம்? புளிப்புச்சுவையான எலுமிச்சம் பழச்சாறு நாம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் காரத்தன்மையாக மாறிவிடும். பல நன்மைகள் ஏற்பட உதவும்.

எலுமிச்சம் பழத்தில் பொட்டாசியம், பாஸ்பரஸ், சிட்ரிக் ஆசிட், வைட்டமின் சி ஆகியவையும் எலுமிச்சம் பழத் தோலில் மாவுப்பொருள், புரதம், கொழுப்புப் பொருள் ஆகியவையும் இருக்கின்றன.

பெரிய மனிதர்களைச் சந்திக்க மகிழ்விக்க ஒரு எலுமிச்சம் பழம் போதுமானது. சுபகாரியங்களுக்கும், கோவில் அர்ச்சனைக்கும் மந்திரவாதிகளுக்கும் எலுமிச்சை தேவை. உணவுப்பொருளில் சேரும்போது இதன் சத்துப் பொருள் உணவில் சேர்வதோடு நல்ல மணமும் ருசியும் கிடைக்கிறது. லைம் ஜூஸ் கிளிசரின் தைலத்தை தேய்த்துக் குளித்தால் கண்களுக்கு குளிர்ச்சி தரும். இதற்கு வெறும் எலுமிச்சம் பழச்சாறைக்கூட உபயோகிக்கலாம்.

கல்லீரலைப் பாதுகாப்பதில் இதற்கு ஈடான பழங்களே இல்லை.

எலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும். நல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும். இவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.

எலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீர் சமம் கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும். எலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.500 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்.

பேதி மருந்து சாப்பிட்டு, பேதி நிற்காவிட்டால் எலுமிச்சம் பழச்சாறு சாப்பிட வேண்டும். தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சம் பழத் துண்டை வைத்து தேய்த்தால் தேள் விஷம் குறையும். இதில் உள்ள டார்ட்டாரிக் அமிலச் சத்துதான் இதற்குக் காரணம்.

வெயிலில் வேலை செய்தல், இரவுப்பணியில் கண் விழித்தல் காரணமாக ஏற்படும் நீர்க்குத்தல், நீர் எரிச்சல் ஆகியவற்றிற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் தண்ணீர் கலந்து சாப்பிட்டாலே போதுமானது.

வெட்டைச் சு10டு தணிய அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு எலுமிச்சம்பழச் சாறும் சிறிய அளவு நீராகாரத் தண்ணீரில் கலந்து மூன்று தினங்கள் சாப்பிட்டால் நோய் நீங்கும்.

மலச்சிக்கல் நோய் ஆரம்ப நிலையில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றில் சிறிது சோற்றுப்பு கலந்து பருகினால் போதுமானது. மூன்று நாட்கள் காலை வேளையில் சாப்பிட வேண்டும்.

சு10ட்டு இருமலுக்கு ஒரு எலுமிச்சம்பழச்சாறும் சமபாகம் தேனும் கலந்து, காலை மாலை சாப்பிட வேண்டும்.

பித்த மயக்கம் வருபவர்கள் இரண்டு எலுமிச்சம் பழச்சாற்றில் 25 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து காலை வேளையில் சாப்பிட்டால் பித்த மயக்கம் தீரும்.

மூத்திரப்பை சுத்தம் அடைய தினமும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த தண்ணீர், மோர், ரசம் இவற்றைச் சாப்பிட்டால் மூத்திரப்பைக் கோளாறுகள் அனைத்தும் விலகிவிடும். சிறுநீர் எரிச்சலை உடனே நிறுத்தும். நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கும் காட்டுச் சீரகம் என்ற மருந்தை நன்றாக மைபோல அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்தால் சாந்துப் பதம் வரும். இதைத் தலையில் நன்றாகத் தேய்த்து சிறிதுநேரம்வைத்திருந்து தலை முழுகினால் தலையில் உள்ள பொட்டு, பொடுகு, பொருக்கு முதலானவை சிலமுறை உபயோகத்தில் மாறிவிடும். தலையில்பேன் உள்ளவர்கள் மயிர்க்கால் வரை நன்கு அழுத்தித்தேய்த்து நன்றாக ஊறிய பின் தலை முழுகினால் பேன்கள் இறந்துவிடும். தலைமயிர் சுத்தமாகும். எலுமிச்சம் பழச்சாற்றில், காட்டுச் சீரகத்தை சாந்துபோல் அரைத்து சொரி, சிரங்குகளுக்குப் போட்டால் நோய் நீங்கும். சொரி, சிரங்குகள் நீடித்த நாட்களாக இருப்பவர்கள் பழச்சாற்றில் சீனி கலந்து பகல் வேளையில் தொடர்ந்து சாப்பிட வேண்டும். தேமல் நோய் உள்ளவர்கள் பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறையும். உடலில் தேய்த்து 8மணி நேரம் வைத்திருந்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.

முகப்பரு உள்ளவர்கள் தினம் ஒரு எலுமிச்சம்பழச்சாறு உள்ளுக்குச் சாப்பிட்டு, இரவு படுக்கும் போது பழச்சாற்றை மேலுக்குப் பூசி வந்தால் முகப்பரு மறைந்து விடும்.

திரிகடுகு சு10ரணத்தில் சற்றுக் கூடுதலாக எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு ஓரளவிற்கு சீனியும் சேர்த்து ஒரு மண் கலயத்திலிட்டு நன்றாக மூடி சீலை மண் செய்து ஒரு அடி ஆழத்தில் மண்ணில் புதைத்து ஆறுவாரங்கள் சென்ற பின் எடுத்து எலுமிச்சை நீரை மட்டும் வடிகட்டி வைத்துக் கொண்டு காலை மாலை சாப்பிட்டு வந்தால் சாதாரண மருந்துகளுக்கு கட்டுப்படாத அஜீரணம், பசியின்மை, வாய்வு வலிகள், கை, கால் உளைச்சல் நரம்புத்தளர்ச்சி, ரத்த சோகை முதலிய வியாதிகளைப் போக்கிவிடும். இது கை கண்ட மருந்தாகும்.

இதோ ஒரு இனிப்பான செய்தி... எலுமிச்சையில் இருந்து ஸ்குவாஷ் செய்து தினம் சாப்பிடுங்கள்.

எலுமிச்சம் பழச்சாறு 1 கிலோ, சர்க்கரை 2 கிலோ இந்த அளவில் எடுத்துக் கொள்ளுங்கள்.

எலுமிச்சம் சாற்றை வடிகட்டவேண்டும். சர்க்கரையை தண்ணீரில் பாகுபதம் வரும் வரை காய்ச்ச வேண்டும், அடுப்பை விட்டு எடுத்து பாகில் பழச்சாற்றைச் சேர்த்து வைத்துக் கொண்டு தினமும் சாப்பிடலாம். நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமானால் ஒரு கிலோ பழச்சாற்றுக்கு 700 மில்லி கிராம் பொட்டாசியம் பெட்டாபை சல்பேட் கலந்து வைத்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை: