| |||||
புதன், டிசம்பர் 08, 2010
தலைமுடிக்கு ஏற்ற வீட்டு வைத்தியம்
தேங்காய் பால் தலைமுடிக்கு வரப்ரசாதம்:
தலை முடி பராமரித்தல் பற்றி போதுமான அளவு தேவா அவர்கள் கூறியுள்ளார்கள்.. ஆனாலும் எனக்கு தெரிந்த நான் பயன்படுத்தி பயன்பெறும் ஒரு டிப்ஸ்.
தயாரித்தல் :
முடிக்கு ஏற்றவாறு தேங்காயை எடுத்து (ஒரு மூடி) சிறிது நீர் விட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து ஒரு கப்பில் எடுத்துக்கொள்ளவும்.
எப்படி பயன்படுத்த வேண்டும் :
1.முக்கியமாக தலைமுடி சுத்தமாக இருக்க வேண்டும்.( வெள்ளிக்கிழமை தலைக்கு, குளித்தால் அடுத்த நாள் சனிக்கிழமை காலை அப்ளை செய்யவும்.)
2.மிகவும் நீர் போல இருப்பதால் உருண்டு கழுத்தில் எல்லாம் வர வாய்ப்புள்ளது. அப்ளை செய்து விட்டு ஸ்விம்மிங் கேப் கூட போடலாம்...
3.இரண்டு மணி நேரம் ஊறிய பின் ஷாம்பு போடாமல் தலையை நன்கு அலச வேண்டும்.
4.தேங்காய் பாலில் உள்ள இயற்கையான எண்ணெய் தலையில் தங்கி இருக்கும்..
5.அடுத்த நாளோ, அல்லது தேவைப்படும் போது ஷாம்பு போட்டு தலைக்கு குளிக்கலாம்.

பலன் :
1.தலைமுடி மிருதுவாகும்
2.புதிய முடிகள் உருவாகும் (மூன்றே வாரத்தில் உணரலாம்)
3.முடி உதிர்தல் கட்டுபடும்
4.முடி நீளமாக வளர உதவும்.
2.புதிய முடிகள் உருவாகும் (மூன்றே வாரத்தில் உணரலாம்)
3.முடி உதிர்தல் கட்டுபடும்
4.முடி நீளமாக வளர உதவும்.
வாரம் இருமுறை தலைக்கு குளிப்பதை எவ்வாறு தவறாமல் செய்கிறோமோ அதை போல வாரம் ஒரு முறையாவது இதை கடைபிடித்து பார்த்து சொல்லுங்கள். எல்லோரும் வித்தியாசத்தை உணருவீர்கள். என்னை கொண்டாடுவீர்கள் ;-
இது தாங்க இயற்க்கை!!!
தினமும் வாழைப் பழம் ,இரவு தோறும் உலர்ந்த திராட்சை, மாலையில் நிலக்கடலை உருண்டை , ராகி-சம்பா கோதுமை சேர்த்து செய்த கருப்பட்டி கலந்த காஞ்சி, பசு நெய் ஊற்றிய பருப்பு சாதம், கடைந்த கீரை, மசித்த உருளைக்கிழங்கு, பசும்பால்......இவையெல்லாம் உடலின் எடையச் சீராகப் பராமரிக்கும் குழந்தைகளுக்கு ஏற்ற போஷாக்கு உணவுகள் .
இவை தினமும் இருந்தால் ......தேவையில்லை மருந்துகடை கலர் கலர் டானிக்குகள்
காதை குடையிறதுதான் வேலை
காதைப் பொத்திக் கொண்டு வந்தாள் அந்தப் பெண்மணி.
காது வலியின் தாக்கத்தால் முகம் சோர்ந்திருந்தது.
தெளிவாகப் பார்ப்பதற்காக காதைத் திருப்பி கூர்வெளிச்சப் பக்கம் திருப்ப முயன்றபோது,
"தொடாதையுங்கோ, காதைத் தொட்டால் உயிர் போகிற வலி" என்றாள்.
"என்ன நடந்தது" என விசாரித்தேன்.
"வழமையாக காது கடிக்கிறது. திடீரென இப்படியாயிற்று" என்றாள்.
"காது கடித்தால் என்ன செய்வீர்கள்?" வினவினேன்.
"நெருப்புக்குச்சி, சட்டைப் பின், இயர்பட்ஸ் என்று எது கிடைத்தாலும் காதைக் குடையுறதுதான் வேலை" என்றான் கூட வந்த மகன்.
காது மென்மையானது. திடப்பொருட்களால் கிண்டியதால் உராய்வு ஏற்பட்டு கிருமி தொற்றிவிட்டது. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளும் வலி நிவாரணி மருந்துகளும் கொடுக்கக் குணமாயிற்று.
இன்னுமொரு இளம் பையன் நீச்சலடித்த பிறகு காதுவலியோடு துடித்து வந்தான்.
நீந்திய பிறகு காது அடைப்பது போல இருந்ததாம். காதுக்குள் தண்ணி போய்விட்டதென எண்ணி இயர்பட்ஸ் வைத்துத் துடைத்தான். வலி மோசமாகிவிட்டது.
காதுக்குள் குடுமி இருந்தால் குளிக்கும்போதோ நீந்தும் போதோ நீர் உட்சென்றால் காது அடைக்கும். அது தற்காலிகமானது. உட்காதுக்குள் நீர் போய்விட்டதோ என பயப்பட வேண்டியதில்லை. காதுக்குடுமி நீரில் ஊறிப் பருத்ததால் காது அடைப்பது போன்ற உணர்வு ஏற்படும். அது உலர அடைப்பு எடுபட்டுவிடும்.
இந்தப் பையன் இயர்பட்ஸ் வைத்து நீர் எடுக்க முயன்றபோது குடுமி காதின் உட்பக்கமாக நகர்ந்து செவிப்பறையை அழுத்தியதால் கடுமையான வலி ஏற்பட்டது. நல்ல காலம் செவிப்பறை உடையவில்லை. உடைந்திருந்தால் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.
இப்படி எத்தனையோ சம்பவங்களைக் கூறலாம். குளிக்க வார்க்கும் போது கைக்குழந்தைக்கு காதுக்குள் தண்ணி போனது என அதைச் சுத்தப்படுத்தப்போய் குழந்தையைச் செவிடாக்கியிருக்கிறார்கள் பல பாட்டிமார்கள்.
காதுக்குள் தண்ணீர், காதுக்கடி, அரிப்பு என எத்தனையோ காரணங்களுக்காக தேவையற்று காதைச் சுத்தப்படுத்த முனைவதால் ஏற்படும் பாதிப்புகள் இவை.
காது குப்பைக் கூடையோ, சுத்தப்படுத்த வேண்டிய உறுப்போ அல்ல. காதுக்குள் உற்பத்தியாகும் குடுமி, காதைப் பாதுகாப்பதற்காகவே சுரக்கிறது. அதை நீங்கள் அகற்ற வேண்டியதில்லை.
காதைச் சுத்தப்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால் குளிக்கும்போது தலையைச் சற்று சரித்துப் பிடித்துக் கொண்டு காதுக்குள் கைகளால் ஏந்திய சுத்தமான தண்ணீரை ஊற்றுங்கள்.
பின் தலையை மறுபக்கமாகச் சரிக்க நீர் வெளியேறிவிடும். இவ்வாறு இரண்டு மூன்று தடவைகள் நீர் விட்டு சுத்தப்படுத்தலாம்.
காதுக்குள் விடும் நீர் தலைக்குள் போகாது, செவிப்பறை தடுக்கும்.
ஆயினும் காதிலிருந்து சீழ் அல்லது நீர் வடிபவர்கள் இவ்வாறு நீர் விட்டுச் சுத்தப்படுத்தக் கூடாது.
இப்படிச் சுத்தம் செய்யும்போது காது அடைத்தால் பயப்படாதீர்கள். நீர் உலர்ந்ததும் அடைப்பு மறைந்துவிடும்

வயிற்றில் பூச்சியா!
உங்கள் குழந்தை இரவில் நற நற என பல் கடிக்கிறதா?
அவ்வப்போது வயிறு வலிக்கிறது என்று சொல்கிறதா?
டூ பாத்ரூம் போகும்போது குட்டிகுட்டியாக புழுக்கள் இருக்கிறதா?
இது வயிற்றுப் புழு பிரச்சினை தான். நீங்கள் ஒவொரு சண்டேயும் வேம்பு தளிர் இல்லை,அறை டீஸ்பூன் ஓமம்,கால் விறகடி மஞ்சள் இவைகளை அரைத்த கலவையை சிறு சுண்டைக்காய் அளவு குழந்தைக்குக் கொடுங்கள். மோர் சாதத்திற்கு சுண்டை வற்றல் சேர்த்துக் கொடுங்கள். சரியாகவில்லை என்றால் நேரே மருத்துவரிடம் சென்று காட்டுங்கள் .கண்டு கொள்ளாமல் விட்டால் ரத்த சோகை ,மண்ணீரல் வீக்கம் என நோய் தொடர்கதையாகும்

திங்கள், டிசம்பர் 06, 2010
காய்கறி பழங்களின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்
நம் உடம்பிலுள்ள இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து இருதய அடைப்பு ஏற்படுகிறது. இந்த இருதய அடைப்பு மாரடைப்புக்கு வழிவகுத்து இறுதியில் மரணத்தின் பிடியில் கொண்டு போய் சேர்த்துவிடும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இந்த இருதய அடைப்பை உடைக்க முடியாதா? நிச்சயம் முடியும்.
இயற்கை வழியில் செல்லும் எவரும் இருதய அடைப்பு என்ற அபாயத்திலிருந்து தப்பித்துவிடலாம்.
காரட்: தினமும் காரட்டை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் (பச்சையாக) இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
முட்டைக்கோசு: மாரடைப்பு நோய் வரும் வாய்ப்பினைக் குறைக்கிறது.
பீட்ரூட்:ஃபோலிக் ஆசிட், இரும்புச் சத்து பீட்ரூட்டில் உள்ளதால் தொடர்ந்து உண்போர்க்கு இரத்தசோகை நோய் வருவதில்லை. இரத்தக் குழாய்களில் படியும் கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
இஞ்சி: கணுக்கள் சிறிதாக உள்ள இஞ்சியைத் தேர்ந்தெடுங்கள். இஞ்சி இரத்தக் குழாய்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுத்து மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. வாய்வுத் தொல்லையைப் போக்குகிறது. மூட்டு வலியைக் குறைக்கிறது.
வெங்காயம்: வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் இரத்தத்தின் கொலஸ்ட்ரால் அளவு குறைவதோடு இரத்தத்தின் உறை தன்மையும், ஒட்டும் தன்மையும் குறைவதால் மாரடைப்பு நோய் வரவே வராது.
மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் வராமல் தடுக்கும் சக்தி வெங்காயத்திற்கு உண்டு என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.
இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்தவர்களும் கூட தினமும் 100 கிராம் வெங்காயத்தைத் தொடர்ந்து உண்டு வந்தால் படிப்படியாக இருதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள் கரைந்து மறைந்துவிடுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் தினம் இரண்டு ஆப்பிள் பழங்களைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் சாப்பிட்டு வந்தால், கொலஸ்ட்ரால் அளவு 10லிருந்து 15 சதவிகிதம் வரை குறைந்துவிடுகிறது. ஆப்பிள் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது.
பூண்டு: இதில் `சாலிசிலிக்’ என்ற இரசாயனப் பொருள் உள்ளது. நாம் சாப்பிடும் உணவின் மூலம் இரத்தக் குழாய்களில் அதிக அளவு கொழுப்பு சேர்ந்து அடைப்பை உண்டாக்கும் போது பூண்டிலுள்ள `சாலிசிலிக்’ என்ற சத்து அந்த அடைப்பை உடைத்துவிடுகிறது.
சுரைக்காய்: இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்பை நீக்குவதில் சுரைக்காய் பலே கில்லாடி! சுரைக்காய் சாற்றை வெறும் வயிற்றில் 200 மிலி மூலம் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் தவிடு பொடியாகிவிடும்.
வெள்ளரிக்காய்: இரத்தத்திலுள்ள யூரிக் ஆசிட்டைக் கணிசமாக குறைத்து, இதயத்தின் செயல்பாட்டைச் சுறுசுறுப்பாக இயக்க வல்லது. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குவதில் இதற்கும் பங்கு உண்டு.
தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
தர்ப்பூசணி: இதயத்தைக் குளிரச் செய்து இரத்தக் குழாய்களின் அடைப்பைப் போக்கி இரத்த ஓட்டத்தைச் சீர்படுத்துகிறது.
முள்ளங்கி, வெண்டைக்காய்: இந்தக் காய்களைத் தினசரி காலையில் பச்சையாகச் சாப்பிட்டு வந்தால் இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகள் மூன்றே மாதங்களில் 80 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுவிடும். ஆனால் தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும்.
எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
எனவே, காய்களையும் பழங்களையும் நிறையச் சாப்பிட்டு இரத்தக் குழாய்களில் படிந்துள்ள அடைப்புகளைப் போக்கி மாரடைப்பு நம்மைத் தாக்காத வண்ணம் இன்புற்று வாழலாம்.
Source: Vanjoor
சூரிய ஒளி
உடல் ஆரோக்கியத்திற்கு சூரிய ஒளி எவ்வளவு அவசியம்என்பது தற்போது விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகிறது.சூரிய ஒளி உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் ஆதாரமாகும்.
நாம் கடவுளிடம் வைக்கும் பிரதான கோரிக்கைகளில் உடல்நலனுடன் கூடிய நீண்ட ஆயுள் என்பதே முதன்மையானதாகஇருக்கும். அத்தகைய ஆயுள் எதனால் பெருகுகிறது என்பது குறித்துலண்டனில் விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் பல புதிய தகவல்கள்வெளியாகிவுள்ளன.
ஆயுள் பெருகுவதற்கு உடல் சத்துக்களில் வைட்டமின்-டிமுன்னிலை வகிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அந்தசத்தால் உடலுக்கு பல நன்மைகள் இருப்பதையும், காலை சூரியஒளியின் மூலம் இந்தச் சத்து உடலுக்கு அதிகளவில்கிடைப்பதையும் ஏற்கெனவே விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
பால், மீன் உள்ளிட்ட உணவுப் பொருள்களில் அதிக அளவில்வைட்டமின்-டி சத்து இருப்பதை சுட்டிகாட்டியுள்ள விஞ்ஞானிகள்,இதனை பெரும்பாலான மக்கள் அறிந்திருக்கவில்லை எனதெரிவித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பாக மேற்கொண்டுநடத்தப்பட்ட ஆய்வில் ரத்தத்தில் வைட்டமின் -டி சத்து 5 முதல் 10நானோ மில்லி லிட்டர் அளவில் இருப்பின், அத்தகையோருக்குஇறப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக அந்த முடிவுகள்தெரிவிக்கின்றன.
ரத்தத்தில் 20 முதல் 30 நானோ மில்லி லிட்டர் அளவு இந்தச் சத்துஇருப்பின், அவர்களுக்கு ஆயுள் பலம் பெருகுவதுடன், இதயப்பாதிப்பு உள்ளிட்ட நோய்கள் வருவதும் பெருமளவு தடுக்கப்படும் எனவிஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, நமது உடல் நலத்தை காத்து,ஆயுள் பலத்தை பெருக்க சூரிய ஒளி உடலுக்கு அவசியம் என்றும்அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
ஆயுள் பலம் பெருகுவதுடன், உடலை ஆரோக்கியமாக பேணுவதற்குசூரிய நமஸ்காரம் எந்தளவுக்கு முக்கியம் என்று நம் முன்னோர்கள்வலியுறுத்திச் சென்றதன் அவசியம், தற்போது ஆய்வின் மூலம்மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது
காலையில் சூரிய ஒளியில் தூய்மையான காற்று உள்ள பகுதியில்நடந்து செல்வது நம் உடல் நலனையும் ஆரோகியத்தையும்வாழ்நாளையும் அதிகரிக்கும் என்பது அனைவரும் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்றாகும்
சர்க்கரை நோய்க்கு மருந்து
நீங்கள் சர்க்கரை நோயாளியா? இனி கவலை வேண்டாம். தினமும்“பிஞ்சு‘ முட்டைக்கோஸ் (ஆரஞ்சு பழ அளவிலிருந்து சற்று சிறியதாகஇருக்கும்) தினமும் சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோயினால் ஏற்படும்உடல் உறுப்பு பாதிப்புகளை தவிர்க்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமானால்இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்கள் பாதிப்படையும். அதனால்மாரடைப்பு ஏற்படும். அதே போல் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டால் வலிப்பு ஏற்படும்.
இவற்றுக்கு காரணம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவுகட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே செல்வதால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுகிறது. அதன் மூலம் மேற்கண்டபாதிப்புகள் ஏற்படுகின்றன.
“பிஞ்சு‘ முட்டைக்கோஸ் தொடர்ந்து சாப்பிடுவதால் மாரடைப்புமற்றும் வலிப்பு வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவேஇருந்ததை இதற்கு முன்னர் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இந்நிலையில் பிரிட்டனைச் சேர்ந்த பேராசிரியர் பால் தோர் நல்லேதலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் பிஞ்சு முட்டைக்கோஸினால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்படும் மாற்றங்கள் குறித்துதீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.
பிஞ்சு முட்டைக்கோஸில் உள்ள புரதச்சத்து, உடலில் செரிமானம்செய்யும் உறுப்புகளை மேலும் தூண்டச் செய்கிறது. இதனால்ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, ரத்தக் குழாய்கள்பாதுகாக்கப்படுவதுடன், உயிரணுக்கள் பாதிப்படைவதையும் தடுக்கசெய்கிறது.
ரத்த நாளங்களில் ஏற்படும் நோயினால் பாதிக்கப்பட்டநோயாளிகளிடம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் இது தெரியவந்தது.
Source: adhikaalai.com
ஆரோக்கியமாய் வாழ. .
உடல் எடை கூடுவதைத் தவிர்ப்பதற்கான சில வழிமுறைகள்: -
1) உணவில் காய்கறி வகைகள் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்
2) எண்ணெயில் பொறித்த உணவுப் பண்டங்களை குறைத்தல் மற்றும்உணவில் எண்ணெய் உபயோகத்தை குறைத்துக் கொள்ளுதல்
3) காலை உணவினை தவறாமல் எடுத்துக் கொள்ளுதல்
4) தனக்கு தேவையான தினசரி கலோரி அளவையும், தினம் உண்ணும்உணவுகளின் கலோரி அளவுகளையும் தெரிந்து கொள்ளுதல்
5) நேரம் கடந்து உணவு அருந்துவதை தவிர்ப்பதுவும், நேரத்தில்தூங்குவதற்கு கற்றுக் கொள்ளுதலும்
6) தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு அதிகம் இல்லாதவர்கள்(நம்மில் பெரும்பான்மையானவர்கள்) குறைந்தது ஒரு மணி நேரம்நடை பழகுதல் அல்லது உடற்பயிற்சி செய்தல்
சளி – பாட்டி வைத்தியம்
சளி: அறிகுறிகள்:
தொண்டை கரகரப்பு, தலைவலி, உடல் வெப்பம் அதிகரித்தல்(அ)காய்ச்சல்,
உடல்வலி, பசியின்மை, மூக்கடைப்பு, தும்மல், இருமல்
உடல்வலி, பசியின்மை, மூக்கடைப்பு, தும்மல், இருமல்
நோய்க்காரணம்:
வைரஸ் எனும் நோய்க் கிருமி. மேலும் தூசி ஒவ்வாமை, திடீர் வெப்பநிலை
மாற்றம், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி, மன அழுத்தம், மற்ற
மூச்சுகோளாறுகள்
வைரஸ் எனும் நோய்க் கிருமி. மேலும் தூசி ஒவ்வாமை, திடீர் வெப்பநிலை
மாற்றம், குறைவான நோய் எதிர்ப்புச் சக்தி, மன அழுத்தம், மற்ற
மூச்சுகோளாறுகள்
கைவைத்தியம்:
1. ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து மிதமான வெந்நீரில்
சிறிது தேனுடன் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது
இரண்டு முறை பயன்படுத்த சளிப்பிரச்சினை
தீரும். எலுமிச்சைபழம் விட்டமின் சி நிறைந்தது.
இது நோய்க்காலத்தில்
உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நச்சு சக்தியை
குறைக்கிறது. மேலும் நோயின் காலத்தை குறைக்கிறது.

2. பூண்டு சூப்: மூன்று அல்லது நன்கு பூண்டு பற்களை நறுக்கி
ஒரு கப் தண்ணீர் சேர்த்து சூப் தயாரிக்கலாம்.
சூப்பாக குடிப்பதால் நம்
உடம்பிலுள்ள நச்சுப்பொருட்களை பூண்டு வெளியேற்றுவதுடன்
காய்ச்சலையும் குணப்படுத்துகிறது. நான்கு துளி பூண்டு
எண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி வெங்காய சாறை சேர்த்து
தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு
இரண்டு அல்லது மூன்று முறை குடிக்க சளி குணமாகும்.

3. இஞ்சி : பத்து கிராம் இஞ்சியை சிறு துண்டுகளாக வெட்டி
ஒரு கப் தண்ணீருடன் கலந்து வேகவைத்து பின் அதனை
வடித்து விட்டு வடித்த சாறில் அரை கரண்டி சர்க்கரை
சேர்த்து சூடாக குடிக்க வேண்டும். இஞ்சி டீ தயாரிக்க சில
துண்டுகள் இஞ்சியை தண்ணீரில் வேகவைத்து பிறகு டீத்தூளை
சேர்க்கலாம். இதை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்ள
சளி இருமலுடன் கூடிய காய்ச்சல் குணமாகும்
.

4.பத்து கிராம் வெண்டைக்காயை அரை லிட்டர் தண்ணீரில்
வேக வைத்து இறக்கிய பின் வரும் ஆவியை மூச்சு
உள்ளிழுக்க வேண்டும். இதை நாளொன்று ஒன்று
அல்லது இரண்டு முறை செய்யலாம். இது தொடர்ந்த வறட்டு
இருமலுக்கும், தொண்டை கரகரப்புக்கும் நல்லது.
வேக வைத்து இறக்கிய பின் வரும் ஆவியை மூச்சு
உள்ளிழுக்க வேண்டும். இதை நாளொன்று ஒன்று
அல்லது இரண்டு முறை செய்யலாம். இது தொடர்ந்த வறட்டு
இருமலுக்கும், தொண்டை கரகரப்புக்கும் நல்லது.
5.பாகற்காயின் வேரை விழுதாக அரைக்கவும். ஒரு தேக்கரண்டி
இந்த விழுதுடன் சம அளவு தேன் அல்லது துளசி சாறை
சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட
சளி வராமல் இருக்கும்.
இந்த விழுதுடன் சம அளவு தேன் அல்லது துளசி சாறை
சேர்த்து மாதம் ஒரு முறை இரவில் சாப்பிட
சளி வராமல் இருக்கும்.
6.அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை 30மிலி வெதுவெதுப்பான
பாலில் கலந்து ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை
பருக சளியும் தொண்டை எரிச்சலும் சரியாகும்.
முதலில் மஞ்சளை தணலில் காட்டி பின் மிதமான தீயில் பாலை
சிறிது சிறிதாக கலக்க வேண்டும்.
மூக்கொழுகினால் சூடான மஞ்சளில் இருந்து
வெளிவரும் ஆவியை சுவாசிக்க உடனடீ நிவாரணம் கிடைக்கும்.

7.மிளகு புளி ரசம்: 50மிகி புளியை 250மிலி தண்ணீரில் கரைத்து
சில நிமிடம் கொதிக்க வைத்து பிறகு ஒரு தேக்கரண்டி
மிளகுப்பொடியையும் ஒரு தேக்கரண்டி
காய்ச்சிய வெண்ணெய்யையும் சேர்த்து இறக்கவும். ஆவிபறக்க
இந்த ரசத்தினை ஒரு நாளைக்கு மூன்ருமுறை பருகவும்.
இதைக் குடித்தவுடன் கண்களிலும்
மூக்கிலும் நீர் வரும் இதனால் மூக்கடைப்பு சரியாகும்

வெள்ளி, டிசம்பர் 03, 2010
மருதாணி
மருதாணி.

மருதாணி.
1) மூலிகையின் பெயர் -: மருதாணி.
2) தாவரப்பெயர் -: LAWSONIA INERMIS.
3) தாவரக்குடும்பம் -: LYTHRACEAE.
4) வேறு பெயர்கள் -: மறுதோன்றி, அழவணம், ஐவணம் மற்றும் மெகந்தி ஆகியவை.
5) தாவர அமைப்பு -: மருதாணி எல்லாவகை நிலங்களிலும் வளரக்கூடியது. வெப்பத்தைத் தாங்கக்கூடியது. எதிர் அடுக்கில் அமைந்த கூர் இலைகைக் கொண்டது. இலைகள் 2 - 4 செ.மீ. நீளமுடையது. இது சுமார் ஆறு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு மரம். பூக்கள் கொத்தாக வளரும், வெள்ளை, சிகப்பு, மஞ்சள் மற்றும் ஊதாக் கலர்களில் வழத்திற்குத் தகுந்தால் போல் இருக்கும். வாசனை உடையது. நான்கு இதழ்களைக் கொண்டிருக்கும். இது ஏப்ரல், மே மாதங்களில் பூத்துக் குலுங்கும். உருண்டையான காய்கள் உண்டாகும், இதில் வரண்ட பின் சுமார் 45 விதைகள் இருக்கும்.இது மருத்துவ குணமுடையது. இதை அட்டகர்ம மூலிகை என்றும் கூறுவர். இது இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் வணிக ரீதியாக வளர்கிறார்கள். விதையிலிருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். இதை வாசனைப் பொருளாகப் பயன் படுத்துகிறார்கள். பாக்கீஸ்தானில் அதிகம் உபயோகிக்கிறார்கள். இதன் பூர்வீகம் வட ஆப்பிரிக்கா, தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிலும் பரவியுள்ளது. இதன் இலைகளை 5 நாட்கள் நிழலில் உலர்த்திப் பயன்படுத்துவார்கள். இதை விதை மூலமும், கட்டிங் மூலமூம் இனப் பெருக்கம் செய்வார்கள்.
6) இதில் உள்ள முக்கிய வேதியப் பொருட்கள் - :இலைகளில் க்ளூக்கோசைடு, லாசோம், சாந்தோம்கள் லாக்ஸ் தேன்கள் I,II, மற்றும் III. இதன் விதைகளில் பீட்டா ஐநோனோன் போன்ற வேதிய்ப் பொரிட்கள் உள்ளன.
7) பயன்படும் பாகங்கள் -: இலை, பூ, காய்,வேர் மற்றும் விதை போன்றவை.
8) மருத்துவப் பயன்கள் -: மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும்.புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி அழகூட்டுவார்கள். பெண்களுக்குப் பேய் பிடிக்காது. மருதாணி வைத்துக் கொள்ளும் வழக்கம் சங்க காலத்திலேயே இருந்தது.
மேகநோய் -: பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.
தோல் நோய் -: மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள் - ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

முடிவளர -: இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
உறக்கமின்மை -: தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

பேய் பூதம் -: "மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும்.
கரப்பான் புரகண் -: பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.
கால் ஆணி -: இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.
படைகள்- :கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்
தொட்டாற்சுருங்கி

மருத்துவப்பயன்கள்-: ‘நமஸ்காரி’ என்ற இந்த மூலிகை காந்த சக்தி உடையது. தெய்வீக மூலிகையுமாம். தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உள வாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை மிகுவிக்கும். அதனால் ‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை உடையது.
“பகரவே இன்னமொரு மூலிகேளு
பாங்கான சிணுங்கியப்பா காப்புக்கட்டிநிகரவே
பூசையிடு மந்திரத்தால் நினைவாக
உத்தமனே தூபமிட்டு வைத்துக் கொள்ளே.”
என்பது ஒரு பழம் பாடல், இதன் வேரை வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர்.
இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.
இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும். சிற்றின்பம் பெருகும். 10-20 நாள் சாப்பிட வேண்டும்.
சூடு பிடித்தால் சிறுநீர்த் தாரை எரியும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும். ஆண்மை பெருக இரவு பாலில் 15 கிராம் கலந்து சாப்பிட வேண்டும். சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும் . வயிற்றுப்புண்ணும் ஆறும்.
வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும். மாத விலக்காகும் பெண்கள் இச்செடியின் அருகில் செல்லக் கூடாது, தொடுதலும் கூடாது.
‘மேகநீரைத்தடுக்க மேதினியிற் பெண்வசிய
மாகவுன்னி னல்கு மதுவுமன்றி-தேகமிடைக்
கட்டாகக் காட்டுகின்ற சாலை துரத்திலிடுந்
தொட்டாற் சுருக்கியது சொல்.’
குணம்- தொட்டாற் சுருங்கி மேகமூத்திரத்தை நீக்கும், பெண் வசியம் செய்யும், உடலில் ஓடிக் கண்டுகின்ற வாதத் தடிப்பைக் கரைக்கும் என்க.
உபயோகிக்கும் முறை -: ஒரு பலம் தொட்டாற்சுருங்கி வேரைப பஞ்சுபோல் தட்டி ஒரு மட் குடுவையில் போட்டு கால் படி சலம் விட்டு அடுப்பிலேற்றி வீசம் படியாகசுண்ட, வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற சலம் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும் . இவற்றால் நீர் அடைப்பு, சல்லடைப்பு தீரும். இதன் இலையையும் வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு விராகனெடை பசுவின் பாலில் போட்டுக் கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு போலரைத்து விரை வாதம், கை,கால் மூட்டுக்ளின் வீக்கம் இவைகட்கு வைத்துக் கட்ட குணமாகும். இதன் இலைச் சாற்றைப் பஞ்சில் தோய்த்து ஆறாத ரணங்களுக்கு உட செலுத்தி வைக்க ஆறிவரும். இதன் இலையை ஒரு பெரிய மட் கடத்தில்போட்டுச் சலம் விட்டு வேக வைத்து இடுப்பிற்குத் தாளும் படியான சூட்டில் தாரையாக விட இடுப்பு வலி, குண்டிக் காய்வலி நீங்கும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)