ஞாயிறு, மே 01, 2011

தேன்


சித்த மருத்துவ மருந்துகளில் ஆணி வேராக உபயோகப்படும் பொருள் தேன் ஆகும்.  தேனின் தனிச்சிறப்பே நாள்பட்ட நிலையிலும் கெட்டுப் போகாத தன்மையே.
தேனின் நன்மைகள் பல.  அது நாம் அனைவரும் அறிந்ததே.  ஆனால் சித்த மருந்துகளில் இதன் பயன்பாடு என்பது சிறப்பானது.  ஏனென்றால் தேனோடு சேர்க்கப்படும் மருந்துகளை கெட்டுப் போகாமல் காக்கும் தன்மை கொண்டது.
சித்த மருந்துகள் தயாரிக்கும் காலம் தொட்டு அதாவது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேனைப் பற்றி கூறப்பட்டுவரும் கருத்துக்கள் அனைத்தும் நவீன ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது.  அதாவது தேன் நாள்பட்ட நிலையிலும் கெட்டுப்போவது  அரிது என்ற கருத்து.
இதற்கான காரணங்கள்
· தேனில் நீர்த்தன்மை மிக மிக குறைவு.  இதில் நீர்த்தன்மை  0.6% தான் உள்ளது
· தேனில் நீர்த்தன்மை குறைவாக இருப்பதால், அதில் பாக்டீரியாக்கள், அல்லது பூஞ்சைகள் வளர இயலாது.  இவைகள் வளருவதற்கு நீர்த்தன்மை குறைந்தது 0.7% அல்லது 0.9 % இருக்க வேண்டும்.  இக்கிருமிகள் பாதிக்ககாததால் தேன் கெடாமல் வெகுநாட்கள் பாதுகாக்கப்படுகிறது.
· தேனின் அடர்த்தி அதிகம்.  அதாவது 83% அடர்த்தி மிக்கது.  70% புரக்டோஸ், குளுக்கோஸ் போன்ற சர்க்கரைகள் உள்ளது.
· பூக்களில் உள்ள தேனை, தேனீ பருகி, இடைவிடாத இறகு துடிப்பினால் அதில் உள்ள நீர்த்தன்மை வற்றப்பட்ட தேனை  உண்ணும் போது உடலில் சுரக்கும் திரவத்தினாலும் அடர்வு மிகுந்த தேனாக தேன் கூட்டில் சேர்த்து வைக்கப் படுகிறது.
நெக்டரானது தேனாக தேனீக்களால் மாற்றம் அடையும்போது ஆண்டி மைக்ரோபியல் பொருளாக ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு உற்பத்தியாகிறது.  இதன் காரணமாகவும் தேன் கெடாமல் வெகுநாட்கள் காக்கப்படுகிறது.
· அடர்வுத் தன்மை மிகுந்த தேனானது எந்தவித பாக்டீரியா, பூஞ்சைக் கிருமிகளையும் வளர விடாது.
· தேனானது அமிலத்தன்மை கொண்டது.  அதாவது இதனுடைய ணீஏ  3.2 – 4.5
தேனில் முக்கிய உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ளன. இதனாலும் நாள்பட கெட்டுப்போகாத தன்மையாலும் சித்த, ஆயுர்வேத மருந்து செய்முறைகளில்  தேன் முக்கிய பங்காற்றுகிறது.

கருத்துகள் இல்லை: